அரசு திட்டங்கள், அறிவிப்புகளின் நிலை என்ன? - முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு

சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்ட புதிய அறிவிப்புகளின் நிலை குறித்து ஸ்டாலின் ஆய்வு மேற்கொள்ள உள்ளார்.
அரசு திட்டங்கள், அறிவிப்புகளின் நிலை என்ன? - முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு
Published on

சென்னை,

தமிழக அரசின் திட்டங்கள், சட்டப்பேரவை அறிவிப்புகள் தொடர்பாக தமிழக முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆய்வு மேற்கொள்ள உள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் வரும் 1 மற்றும் 2 ஆம் தேதிகளில் ஆய்வு கூட்டம் நடைபெறவுள்ளது.

இதில் முதல் அமைச்சர் ஸ்டாலின் கலந்து கொண்டு சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்ட புதிய அறிவிப்புகளின் நிலை குறித்து அனைத்து துறை செயலாளர்கள் உடன் ஆய்வு மேற்கொள்ள உள்ளார்.

நகராட்சி, நீர்வளம், மின்துறை, பொதுப்பணி, நெடுஞ்சாலை தொடர்பான ஆய்வு கூட்டம் 1 ஆம் தேதி நடைபெறவுள்ளது. அதை தொடர்நது 2 ஆம் தேதி கூட்டுறவு, பள்ளிக்கல்வி, உயர்கல்வி சமூகநலன் போன்ற துறை செயலாளர்கள் உடன் முதல் அமைச்சர் ஆய்வு நடத்த உள்ளார். இந்த ஆய்வு கூட்டம் காலை 10 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை நடைபெறவுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com