நாம் விட்டுச் சென்றது பாலைவனம் அல்ல; சோலைவனம் - திமுகவுக்கு ஆதரவாக செல்வப்பெருந்தகை பதிவு

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் செல்வப்பெருந்தகை திமுகவுக்கு ஆதரவாக பதிவிட்டுள்ளார்.
நாம் விட்டுச் சென்றது பாலைவனம் அல்ல; சோலைவனம் - திமுகவுக்கு ஆதரவாக செல்வப்பெருந்தகை பதிவு
Published on: 

சென்னை,

தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு, தி.மு.க.வும் ஆதரவை தெரிவித்து உள்ளது. இதன் காரணமாக, தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலினை சந்தித்து பேசுவதற்காக காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இன்று சென்னைக்கு வருகை தருகிறார்.

தலைவர்கள் சென்னை வருகை

அவருடன், காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் இன்று சென்னைக்கு வருகை தருகின்றனர். அவர்களுடன் தெலுங்கானா முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டியும் இன்று சென்னை வருகிறார். இதில், மு.க. ஸ்டாலினை சந்தித்து பேசுவார்கள் என கூறப்படுகிறது.

இந்த சந்திப்பில், தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு தி.மு.க. அளித்த ஆதரவை மறுபரிசீலனை செய்ய வலியுறுத்தலாம் என தகவல் தெரிவிக்கின்றது. இதேபோன்று, இந்த விவகாரத்தில் மும்பையில் சரத் பவாரையும் சந்தித்து ஆதரவு கோரப்படும் என்று கூறப்படுகிறது.

செல்வப்பெருந்தகை பதிவு

இந்த நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் செல்வப்பெருந்தகை திமுகவுக்கு ஆதரவாக பதிவிட்டுள்ளார். இது தொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-

அற்ற குளத்து அறுநீர்ப் பறவைகளே!

நாம் விட்டுச் சென்றது பாலைவனம் அல்ல; சோலைவனம் !

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X