

விழுப்புரம்
தமிழக அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தால் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் முடிவு என்ன என்பது பற்றி மாநில செயலாளர் வீர பாண்டியன் பதில் அளித்துள்ளார்.
விழுப்புரத்தில் நேற்று இந்திய கம்யூனிஸ்டு கட்சி யின் மாநில செயலாளர் வீரபாண்டியன், நிருபர்க ளுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-இதுவரை இல்லாத அளவிற்கு அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்திருக் கிறது. எனவே போர்க்கால சூழல்போல் அரசு கவனத்தில் கொண்டு எளிய மக்க ளின் நலனை காக்கும் வகையில் விலைவாசி உயர்வை கட்டுக்குள் கொண்டு வர வேண்டும். குறிப்பாக அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை உயராமல் இருப்பதற்கு முதல்-அமைச்சர் கூடுதல் கவ னம் செலுத்த வேண்டும்.
குழந்தைகள் காணாமல் போகுதல் போன்றவை நிகழ்ந்து வரும் நிலையில் காவல்துறையை தன் கையில் வைத்துள்ள முதல்-அமைச்சர் இதில் தனிக்கவனம் செலுத்த வேண்டும். சிறைகளில் இருந்து கைதிகள் தப்பிச்செல்லும் நிகழ்வு கள் நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில், சட்ட விதிகள் கடுமையாக்கப்பட வேண்டும்.இந்தியாவில் 13 கோடி பேரின் வாக்குரிமையை பறித்திருக்கிறார்கள். இது ஜன நாயக படுகொலை. நாட்டின் பிரதமர், உள்துறை அமைச்சர் இருவரும் பார்த் துக்கொண்டிருக்க தலைமை தேர்தல் ஆணையம் இந்த படுகொலையை நிகழ்த் தியிருக்கிறது.
இந்த ஜனநாயக படுகொலையை கண்டிக்கிறேன் என்று தமிழக முதல்-அமைச்சர் கூறுவதற்கு முன்வராதது ஜனநாயகத்திற்கு ஏற்புடையதல்ல. முதல்-அமைச்சர் பொறுப்புக்கும் இது ஏற்புடையதல்ல. நாட்டின் பேராபத்தாக இருக்கும் பா.ஜனதாவை வீழ்த்த வேண்டும். இதை அறியாதவர் அல்ல தமிழக முதல்-அமைச்சர். எனவே ஜனநாயகத்தை காக்கிற அந்தப்போரில் முதல்-அமைச்சர் தன்னை இணைத்துக்கொள்வது நல்லது.
பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் கட்ட முடியாது, கட்டக்கூடாது.. மீனவர்களின் தொன்மைச்சார்ந்த பகுதி அது. கடல், கடல் சார்ந்த இடம் மீனவர் களுக்குரியது. மீனவ மக்களை அந்த இடத்தில் இருந்து அப்புறப்படுத்திவிட்டால் கடல் தனது சிறப்பை இழக்கும். எனவே தமிழக அரசு பட்டினப்பாக்கத்தில் பழைய குடியிருப்புகளை இடிக்கும் அரசாணையை திரும்பப்பெற வேண்டும்.
உள்ளாட்சி தேர்தலுக்கான அறிவிப்புகள் வெளியானவுடன் இந்திய கம்யூனிஸ்டு கட்சி அரசியல் அமைப்பாக கூடி முடிவு செய்து அறிவிக்கும். உள்ளாட்சி தேர் தல், இடைத்தேர்தல், பொதுத்தேர்தல் என எது வந்தாலும் நாங்கள் ஒன்று கூடி அரசியல் முடிவுகளை எடுப்போம். தமிழக அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டால் இந்திய கம்யூனிஸ்டு கட்சி அப்போது முடிவெடுக் கும். கட்சியின் முடிவை நாங்கள் அப்போது அறிவிப்போம். இவ்வாறு அவர் கூறினார்.