பள்ளிகள் திறப்பு எப்போது? - நாளை வெளியாகிறது அறிவிப்பு...!

வரும் கல்வியாண்டிற்கான முழு அட்டவணையை அமைச்சர் அன்பில் மகேஷ் நாளை வெளியிடுகிறார்.
பள்ளிகள் திறப்பு எப்போது? - நாளை வெளியாகிறது அறிவிப்பு...!
Published on

சென்னை,

நடப்பு தேர்வுக்கான பொதுத்தேர்வுகள் முடியும் நிலையில் உள்ளன. ஏற்கெனவே 1 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுகள் முடிவடைந்து தற்போது கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், வரும் கல்வியாண்டிற்கான பள்ளிகள் திறப்பு எப்போது என்பதையும், காலாண்டு, அரையாண்டு தேர்வு அட்டவணை மற்றும் 10,11,12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை உட்பட அனைத்து விபரங்களையும் நாளை காலை 10 மணிக்கு சென்னையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிடுவார் என கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.  

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com