ரூ.2,500 மகளிர் உரிமைத் தொகை எப்போது? அமைச்சர் ஜெகதீஸ்வரி கூறிய முக்கிய தகவல்

கடந்த ஆட்சியுடன் ஒப்பிடுகையில், இந்த 150 நாட்களில் குற்றச் செயல்கள் குறைந்துள்ளதாக அமைச்சர் ஜெகதீஸ்வரி கூறியுள்ளார்.

ரூ.2,500 மகளிர் உரிமைத் தொகை எப்போது?
Published on: 

விருதுநகர்,

“ரூ.2,500 மகளிர் உரிமைத் தொகை வழங்குவது குறித்த அறிவிப்பு கூடிய விரைவில் வெளியிடப்படும்” என அமைச்சர் ஜெகதீஸ்வரி கூறியுள்ளார்.

விருதுநகரில் ரூ.4.60 கோடி மதிப்பிலான வணிகவரித் துறையின் புதிய கட்டடத்தை அமைச்சர் ஜெகதீஸ்வரி திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

"தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை" என்ற கனிமொழி எம்.பி.யின் கருத்துக்கு. "கடந்த ஆட்சியுடன் ஒப்பிடுகையில், இந்த 150 நாட்களில் குற்றச் செயல்கள் குறைந்துள்ளதாகவும், சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

“ரூ.2,500 மகளிர் உரிமைத் தொகை வழங்குவது குறித்த அறிவிப்பு கூடிய விரைவில் வெளியிடப்படும்” இறந்தவர்களின் எண்ணிக்கை கணக்கிட்டு, அவர்களின் பெயர்களை நீக்கம் செய்வது, தகுதியான நபர்களுக்கு கொண்டு சேர்க்கும் பணிகள் நடந்து கொண்டு இருக்கிறது. எங்களுடைய எங்களுக்கு வராமல் வேறு ஒருவருடைய அக்கவுண்ட்டுக்கு பணம் சென்றுவிடுகிறது என நிறைய புகார்கள் வந்து இருக்கிறது. அதனை சரி செய்யும் பணி நடக்கிறது.

கடந்த ஆட்சியில் சரியான வழிமுறைகளை பின்பற்றாமல் கொடுத்ததின் அடிப்படையில், மக்களுக்கு முழுமையாக பயன் அடையவில்லை. தவெக ஆட்சியில் முழுமையாக மக்கள் பயன் அடையும் வேலைகளை செய்ய வேண்டும் என்று முதல்வர் விஜய் ஒரே நல்ல எண்ணத்தில் பணிகள் நடக்கிறது. அதனால் தாமதம் ஆகுகிறது, முதல்வர் விஜய் சொன்ன மாதிரி சொன்ன வாக்குறுதிகளை காப்பாற்றுவார் என்றார்.

மேலும், நடிகர் தனுஷின் அரசியல் வருகை குறித்த கேள்விக்குப் பதிலளித்த அவர், “இது ஜனநாயக நாடு. யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். அப்படி வருபவர்களை நாங்கள் வரவேற்போம்” என்று தெரிவித்தார்.

X

Follow us on Google
Daily Thanthi
www.dailythanthi.com