தமிழகத்தில் காலியாக உள்ள தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் எப்போது? தேர்தல் ஆணையர் பதில்

எம்.எல்.ஏக்கள் ராஜினாமா விவகாரம் தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு விசாரணையில் உள்ளது
தேர்தல் ஆணையர்
Published on

புதுடெல்லி,

கடந்த ஏப்ரல் மாதம் நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்ற முதல் அமைச்சர் விஜய், பின்னர் திருச்சி கிழக்கு தொகுதி பதவியை ராஜினாமா செய்தார். அதிமுக தலைமையுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கரூர் தொகுதியில் போட்டியிட்டு வென்ற எம்.ஆர். விஜயபாஸ்கர், விராலிமலை தொகுதி சி. விஜயபாஸ்கர், பெருந்துறை தொகுதி ஜெயக்குமார் மற்றும் அம்பாசமுத்திரம் தொகுதி இசக்கி சுப்பையா, மதுராந்தகம் தொகுதி மரகதம் குமாரவேல், தாராபுரம் சத்யபாமா ஆகியோரும் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர்.

ராஜினாமா

இதனால் தமிழகத்தில் 7 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்த வேண்டியுள்ளது. எம்.எல்.ஏக்கள் ராஜினாமா விவகாரம் தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு விசாரணையில் உள்ளது. இதனால், இந்த 7 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் எப்போது நடைபெறும் என்ற கேள்வி எழுந்துள்ளது

ஞானேஷ்குமர் பேட்டி

இந்த நிலையில், டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாரிடம் செய்தியாளர்கள் இதுபற்றி கேட்டனர். அதற்கு ஞானேஷ் குமார் அளித்த பதிலில் கூறியதாவது; தமிழகத்தில் காலியாக உள்ள 7 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்த 6 மாத கால அவகாசம் உள்ளது. தேர்தல் வழக்குகள் நிலுவையில் உள்ளதை கருத்தில் கொண்டுள்ளோம். தேர்தல் வழக்குகள் முடிந்த பின் இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்படும்” என்றார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com