தமிழ்நாட்டுப் பெண்களுக்கு ரூ. 2500 எப்போது? - வானதி சீனிவாசன் கேள்வி

குறைந்தபட்சம் பொருளாதாரப் பாதுகாப்பினையாவது எப்போது நிறைவேற்றுவீர்கள்? என வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பினார்.
வானதி சீனிவாசன்
Published on

சென்னை,

பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

மேற்கு வங்க மாநிலத்தில் பா.ஜ.க அரசின் தேர்தல் வாக்குறுதியான மகளிருக்கு மாதம் ரூ. 3,000 வழங்கும் அன்னபூர்ணா திட்டம் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. ஆனால் தமிழகத்தில் பெண்களுக்கு தவெக தேர்தல் அறிவிக்கையில் அறிவித்த மதிப்புமிகு மகளிர் திட்டத்தில் ரூ. 2500 வழங்குவது எப்போது முதல்-அமைச்சரே..? தவெக அரசில் தமிழகப் பெண்களுக்குப் பாதுகாப்புதான் இல்லை... குறைந்தபட்சம் பொருளாதாரப் பாதுகாப்பினையாவது எப்போது நிறைவேற்றுவீர்கள்?

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com