திமுக ஆட்சிக்கு வரும் போதோல்லாம் தமிழ்நாட்டில் தீவிரவாதம் தலை தூக்குகிறது - முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்

திமுக ஆட்சிக்கு வரும் போதோல்லாம் தமிழ்நாட்டில் தீவிரவாதம் தலை தூக்குகிறது என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கூறியுள்ளார்.
திமுக ஆட்சிக்கு வரும் போதோல்லாம் தமிழ்நாட்டில் தீவிரவாதம் தலை தூக்குகிறது - முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்
Published on

சென்னை,

மதுரையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

தேவர் தங்க கவச விவகாரத்தில் ஈ.பி.எஸுக்கு எதிராக சூழ்ச்சிகள் செய்யப்பட்டது. பசும்பொன்னுக்கு எடப்பாடி பழனிசாமி வரக்கூடாது என சூழ்ச்சி நடந்துள்ளது

திமுக ஆட்சிக்கு வரும் போதோல்லாம் தமிழ்நாட்டில் தீவிரவாதம் தலை தூக்குகிறது. அதிமுக ஆட்சி காலங்களில் பயங்கரவாதம் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது"

திமுக இந்தி திணிப்புக்கு எதிராக நடத்தும் போராட்டம் மடை மாற்றும் செயல். தமிழை அதிமுக மட்டுமே பாதுகாத்து வருகிறது. தமிழுக்கு ஒரு பிரச்சினை என்றால் அதிமுக முதலில் நிற்கும்.

அரசின் மெத்தன போக்கினால் மழை நீர் வடிகாலில் செய்தியாளர் விழுந்து இறந்துள்ளார். வட கிழக்கு பருவ மழை முன்னேற்பாடுகளை தமிழக அரசு முறையாக செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com