தமிழக சட்டசபை தேர்தலில் எந்தெந்த தொகுதிகளில் பாஜக போட்டியிட வாய்ப்பு

பாஜக மற்றும் அதிமுக தலைவர்கள் மற்ற தொகுதிகளை இறுதி செய்வதற்காக கலந்தாலோசித்து வருகின்றனர்.
தமிழக சட்டசபை தேர்தலில் எந்தெந்த தொகுதிகளில் பாஜக போட்டியிட வாய்ப்பு
Published on

சென்னை

தமிழகத்தில் அடுத்த மாதம் (ஏப்ரல் ) 23-ந் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. அந்த வகையில், தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதமே இருக்கிறது. அதேபோல், வேட்புமனு தாக்கல் வரும் 30-ந் தேதி தொடங்க உள்ளது. வேட்புமனு தாக்கலுக்கு இன்னும் ஒரு வாரமே இருக்கிறது. அதிமுக கூட்டணியில் பாஜகவிற்கு 27 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில் 15 தொகுதிகள் இறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அந்த தொகுதிகள் பின்வருமாறு:-

சாத்தூர்,கோவை வடக்கு, சிங்காநல்லூர், விருகம்பாக்கம், மதுரை தெற்கு, விளவங்கோடு, நாகர்கோவில், ராதாபுரம், திருப்பூர் தெற்கு, பல்லடம், பண்ருட்டி, கே.வி.குப்பம், சிவகங்கை, தளி, திருச்செங்கோடு ஆகிய தொகுதிகள் இறுதி செய்யப்பட்டுள்ளது. இன்னும் ஒரு சில தொகுதிகளை அதிமுக கூட்டணியில் உள்ள பாமக மற்றும் அமமுக கட்சிகள் ஓரே மாதிரியான தொகுதிகளை கேட்டு வருவதால் அந்த தொகுதிகள் இறுதி செய்யப்படவில்லை. சென்னையில் உள்ள வேளச்சேரி, தி.நகர் மற்றும் நாங்குநேரி தொகுதிகளை கூட்டணியில் உள்ள கட்சிகள் தொடர்ச்சியாக கேட்டு வருவதால் இன்று இரவுக்குள்ளாக முடிவுகள் எட்டப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

சென்னை கிண்டியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஸ் கோயல், மத்திய இணை மந்திரி எல்.முருகன்,தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், அண்ணாமலை, தமிழிசை சவுந்தரராஜன், அதிமுகவின் முன்னாள் அமைச்சர் எஸ்பிவேலுமணி, விஜயபாஸ்கர், உள்ளிட்ட அனைவரும் இந்த பேச்சு வார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com