தமிழக சட்டசபையில் இன்று எந்தெந்த துறைகள் மீது விவாதம்...?

விவாதத்தில் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசுவார்கள்.
தமிழக சட்டசபையில் இன்று எந்தெந்த துறைகள் மீது விவாதம்...?
Published on

சென்னை,

தமிழக சட்டசபையின் இன்றைய கூட்டம் காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது. கூட்டம் தொடங்கியதும் உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை, கூட்டுறவு துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெறுகிறது. இந்த விவாதத்தில் பங்கேற்று ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தங்களது தொகுதிகளுக்கு தேவையான கோரிக்கைகளை முன்வைத்து பேசுவார்கள்.

அனைவரும் பேசி முடிந்தவுடன் அவர்களுடைய கேள்விகளுக்கு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அமைச்சர் வெங்கடரமணன், கூட்டுறவுத்துறை அமைச்சர் காந்திராஜ் ஆகியோர் பதிலுரை வழங்குவார்கள். நிறைவாக, தங்களுடைய துறை சார்பில் புதிய அறிவிப்புகளை வெளியிடுவார்கள்.

X

Daily Thanthi
www.dailythanthi.com