வேகத்தடையில் ஏறி இறங்கியபோது கதவு திறந்து ஆம்புலன்சில் இருந்து ஸ்ட்ரெச்சருடன் சாலையில் விழுந்த நோயாளி


வேகத்தடையில் ஏறி இறங்கியபோது கதவு திறந்து ஆம்புலன்சில் இருந்து ஸ்ட்ரெச்சருடன் சாலையில் விழுந்த நோயாளி
x

கோப்புப்படம் 

வேகத்தடையில் ஏறி இறங்கியபோது ஆம்புலன்சின் பின்பக்க கதவு திறந்து ஸ்ட்ரெச்சருடன் நோயாளி சாலையில் விழுந்தார்.

நீலகிரி

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே ஓட்டுப்பட்டறை பகுதியில் இருந்து நோயாளி ஒருவரை ஏற்றிக்கொண்டு தனியார் ஆம்புலன்ஸ் குன்னூர் அரசு மருத்துவமனைக்கு சென்றது. குன்னூர் பேருந்து நிலையம் அருகே ரெயில்வே தண்டவாளத்தை அடுத்து வேகத்தடை மீது ஆம்புலன்ஸ் ஏறி இறங்கியது.

அப்போது திடீரென ஆம்புலன்சில் பின்பக்க கதவு திறந்தது. மேலும் ஸ்ட்ரெச்சருடன் நோயாளி சாலையில் விழுந்தார். இதைக் கண்ட பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் அவர்கள் கூச்சலிட்டு ஆம்புலன்சை நிறுத்தினர். பின்னர் நோயாளியை மீட்டு அதே ஆம்புலன்சில் மீண்டும் ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த காட்சிகள் அனைத்தும் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் வீடியோவாக பதிவாகி இருந்தது. இது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

1 More update

Next Story