திருவெண்ணெய்நல்லூர் அருகே கிணற்றில் ஆண் பிணம் யார் அவர்? போலீசார் விசாரணை

திருவெண்ணெய்நல்லூர் அருகே கிணற்றில் ஆண் பிணமாக கிடந்தார். யார் அவர்? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவெண்ணெய்நல்லூர் அருகே கிணற்றில் ஆண் பிணம் யார் அவர்? போலீசார் விசாரணை
Published on

திருவெண்ணெய்நல்லூர், 

திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள சரவணம்பாக்கம் கிராமத்தில் உள்ள கிணற்றில் 50 வயது மதிக்கத்தக்க ஆண்ஒருவர் பிணமாக கிடந்தார். இதை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் திருவெண்ணெய்நல்லூர் போலீசார் தீயணைப்பு நிலைய வீரர்களுடன் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, கிணற்றில் மிதந்தவரின் உடலை மீட்டு அக்கம்பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினர். இருப்பினும் அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்ற விவரம் தெரியவில்லை. இதையடுத்து இறந்தவரின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்தவா யார்?, கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது அவரை யாரேனும் கொலை செய்து கிணற்றில் வீசி சென்றார்களா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com