மகளிர் உரிமைத்தொகை ரூ.2,500-வழங்காதது ஏன்? பிரேமலதா கேள்வி

ஒரு கட்சியில் 2 பேர் வெற்றி பெற்றதும் அமைச்சர் பதவிக்காக கூட்டணி மாறி சென்று விட்டார்கள் என பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.
பிரேமலதா கேள்வி
மகளிர் உரிமைத்தொகை
Published on

சென்னை,

தே.மு.தி.க. நிறுவனத்தலைவர் விஜயகாந்தின் பிறந்த நாளை அவரது கட்சியினர் ஒவ்வொரு ஆண்டும் வறுமை ஒழிப்பு தினமாக கடைப்பிடித்து வருகின்றனர். இதை யொட்டி சென்னை கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. தலைமை அலுவலகத்தில் நேற்று வறுமை ஒழிப்பு தின நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா தலைமை தாங்கினார்.

இதில் பொருளாளர் எல்.கே.சுதீஷ் எம்.பி., உயர்மட்டக்குழு உறுப்பினர் நல்லதம்பி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் போது, ராமாபுரம் எம்.ஜி.ஆர். காது கேளாதோர் பள்ளிக்கு ரூ.50 ஆயிரத்துக்கான காசோலையை பிரேமலதா விஜயகாந்த் வழங்கினார்.

பின்னர் நிருபர்களிடம் பிரேமலதா விஜயகாந்த் கூறியதாவது:-

வறுமை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு டெல்லி தமிழ் சங் கத்துக்கு ரூ.1 லட்சம் நிதி வழங்குகிறோம். தேர்தலில் வாக் குறுதி அளித்தால் அதை நிறைவேற்ற வேண்டும். நிறை வேற்ற முடியாது என்றால் ஏன் வாக்குறுதி கொடுக்கிறீர் கள்? த.வெ.க. அரசு இன்றுவரை மகளிர் உரிமைத்தொகை ரூ.2,500 வழங்காதது ஏன்? 'மாற்றம், மாற்றம்' என்று கூறி எந்தவிதமான மாற்றமும் தமிழ்நாட்டில் இல்லை.

தே.மு.தி.க., தி.மு.க.வுடன்தான் கூட்டணி என்பதில் உறுதியாக உள்ளது. ஒரு கட்சியில் 2 பேர் வெற்றி பெற்றதும் அமைச்சர் பதவிக்காக கூட்டணி மாறி சென்று விட்டார்கள். எனக்கும் அழைப்பு வந்தது, ஆனால் நான் செல்ல வில்லை. எங்களுடைய கூட்டணி நிலைப்பாட்டில் என்றைக்கும் மாற்றம் இருக்காது.

இவ்வாறு அவர் கூறினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com