அரசு பள்ளி மாணவர்களுக்கு சாதி அடையாளத்துடன் கூடிய அடையாள அட்டை ஏன்.? - விளக்கம் கேட்கும் தங்கம் தென்னரசு

அமைச்சரின் இந்த பேச்சின் உண்மையான நோக்கம் என்ன? என்று தங்கம் தென்னரசு கேள்வி எழுப்பி உள்ளார்.
அரசு பள்ளி மாணவர்களுக்கு சாதி அடையாளத்துடன் கூடிய அடையாள அட்டை ஏன்.? - விளக்கம் கேட்கும் தங்கம் தென்னரசு
Published on

சென்னை,

அரசு பள்ளி மாணவர்களுக்கு சாதி அடையாளத்துடன் கூடிய அடையாள அட்டை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு சாதி அடையாளத்துடன் கூடிய அடையாள அட்டை ஏன்.? என முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம் கேட்டுள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதள பதிவில் கூறியிருப்பதாவது:-

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு சாதி அடையாளத்துடன் கூடிய அடையாள அட்டை வழங்குவது குறித்து வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் பேசியிருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

அமைச்சரின் இந்த பேச்சின் உண்மையான நோக்கம் என்ன? இது அரசின் நிலைப்பாடா? மாணவர்களிடையே சாதி அடையாளத்தை ஊக்குவிக்கும் வகையிலான இந்தக் கருத்துக் குறித்து, தமிழ்நாட்டு மக்களின் மனதில் எழுந்துள்ள சந்தேகங்களுக்கு அமைச்சர் அவர்கள் தெளிவான விளக்கம் அளிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com