சட்டசபையில் கவர்னர் உரை நேரலை வராதது ஏன்? அமைச்சர் ரகுபதி பதில்

தமிழக சட்டசபையில் வழக்கமாக கவர்னர் பங்கேற்கும் நிகழ்வு நேரலை செய்யப்படும். ஆனால் இன்று கவர்னர் வெளிநடப்பு செய்யும் வரை நேரலை செய்யப்படவில்லை.
சென்னை,
தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
தேர்தல் ஆண்டு என்பதால் ஆட்சியின் மீது குறை சொல்ல வேண்டும் என்று ஆளுநர் கனவு காண்கிறார். சட்டசபையில் உரையை வாசிக்காமல் ஆளுநர் உரையை புறக்கணித்தது திட்டமிட்ட செயல்.தமிழகத்தில் போதைப்பொருள் உற்பத்தி கிடையாது. ஆளுநர் மாளிகை அறிக்கை முற்றிலும் உண்மைக்கு புறம்பானது. தமிழ்நாடு அரசுக்கு எதிராக பொய் குற்றச்சாட்டுகளை ஆளுநர் கூறி வருகிறார். ஆளுநர் உரை நேரலை வராததற்கு தொழில்நுட்ப கோளாறு பிரச்சினையாக இருக்கலாம்.ஆளுநரின் மைக் ஆப் செய்யப்படவில்லை.அரசுக்கு எதிரான தவறான குற்றச்சாட்டுகளை ஆளுநர் வைத்துள்ளார். தமிழக அரசின் முதலீடு ஈர்ப்பு குறித்து ஆளுநர் கூறுவது தவறானது.
பொருளாதார வளர்ச்சியில் தமிழ்நாடு முன்னிலை வகிக்கிறது. தமிழ்த்தாய் வாழ்த்தை முதலில் பாடுவதே மரபு. தேசிய கீதத்தை முதலில் பாட வேண்டும் என்று ஆளுநர் கூறி வருகிறார். மத்திய அரசே தமிழகத்தின் பொருளாதாரம் உயர்ந்துள்ளதாக கூறுவதை ஆளுநர் எப்படி மறுக்க முடியும். இரட்டை இலக்கத்தில் தமிழ்நாட்டின் வளர்ச்சி உள்ளது. தொழில் வளர்ச்சி இல்லை என்றால், இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சியை எப்படி அடைய முடியும்.தமிழகத்தின் கல்வி வளர்ச்சியை பிறமாநிலங்களோடு ஒப்பிடவே முடியாது. வருகிற செப்டம்பர் மாதம் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும். உள்ளாட்சி தேர்தலை கண்டு திமுக அஞ்சவில்லை. தமிழகத்திற்கு போதைப்பொருள் வருவது தடுக்கப்பட்டு வருகிறது” என்று கூறினார்.






