

சென்னை,
தமிழகத்தில் த.வெ.க. அரசு பொறுப்பேற்ற பிறகு, முதல் சட்டசபை கூட்டம் கவர்னர் உரையுடன் நேற்று தொடங்கியது. முதலில், தமிழ்த்தாய் வாழ்த்தும், தொடர்ந்து தேசிய கீதமும் பாடப்பட்ட பிறகு கவர்னர் அர்லேகர் உரை நிகழ்த்த தொடங்கினார்.
அவர் பேசி முடித்ததும், கவர்னர் உரையை தமிழில் சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் வாசித்தார். அதன்பின்னர், மீண்டும் தேசிய கீதம் பாடப்பட்டதும் கூட்டம் நிறைவடைந்தது.
2 முறை தேசிய கீதம் பாடப்பட்ட விவகாரம் சட்டசபையில் இன்று விவாதத்திற்கு வழிவகுத்தது.
இது தொடர்பாக, சட்டசபையில் நடந்த விவாதம் வருமாறு:-
அரசு நிகழ்ச்சியில் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்தும், நிறைவில் தேசிய கீதமும் பாடப்படும். ஆனால் நேற்றைக்கு பேரவையில் தேசிய கீதம் தொடக்கத்திலேயே பாடப்பட்டது. கவர்னருடன் தவெக அரசு இணக்கமாக உள்ளது.
தேசிய கீதம் 2 முறை பாடப்படுவதில் எந்த தவறும் இல்லை. வரவேற்கத்தக்கது.
நாங்கள் எப்பொழுதும் மாநில கொள்கையில் உறுதியாக இருப்போம். அது கவர்னராக இருந்தாலும் சரி. டெல்லி தலைமையாக இருந்தாலும் சரி. ஒரு கவர்னர் புறக்கணித்த அதே இடத்தில் கவர்னர் முன்னிலையில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. 4 வருடங்கள் கழித்து அதை நடைமுறைப்படுத்தியது எங்கள் முதல்-அமைச்சர்.
முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து, இறுதியாக தேசிய கீதம் என்பதுதான் காலம் காலமாக பின்பற்றப்படும் மரபு.
ஒருமுறை, இருமுறை அல்ல.. எத்தனை முறை என்பதை நான்தான் முடிவு செய்ய வேண்டும். ஒரு முறை, 2 முறை பாடப்பட்டது என குற்றம் கண்டுபிடிக்க வேண்டாம். கவர்னருடன் இணக்கமாக இருக்க வேண்டும் என்றே எந்த மாநில அரசும் விரும்பும்.
இவ்வாறு விவாதம் நடந்தது.