

மாத்திரைகள் தின்ற பெண்
கரூர் படிக்கட்டு துறையை சேர்ந்தவர் கந்தசாமி. இவருடைய மனைவி பிரேமா (வயது 57). இந்த தம்பதி படிக்கட்டு துறையில் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு கந்தசாமி திடீரென உயிர் இழந்தார்.இதனால் பிரேமா மனமுடைந்து காணப்பட்டார். இந்தநிலையில் கணவர் இறந்த துக்கம் தாங்க முடியாமல் சம்பவத்தன்று பிரேமா தனது வீட்டில் அளவுக்கு அதிகமான தூக்க மாத்திரைகளை தின்று மயங்கி விழுந்தார்.
சாவு
இதையடுத்து மயங்கி விழுந்த அவரை உறவினர்கள் மீட்டு கரூர் காந்திகிராமத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும், சிகிச்சை பலனின்றி பிரேமா பரிதாபமாக இறந்தார்.இதுகுறித்து தகவல் அறிந்த கரூர் டவுன் சப்-இன்ஸ்பெக்டர் அப்துல்லா தலைமையிலான போலீசார் மருத்துவமனைக்கு சென்று பிரேமாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.