லஞ்சப் புகாரில் தவெகவில் இருந்து நீக்கப்பட்டவரின் மனைவிக்கு பதவி

லஞ்சப் புகாரால் வீரா என்ற வீராசாமி தவெகவில் இருந்து நீக்கப்பட்டார்.
லஞ்சப் புகாரில் தவெகவில் இருந்து நீக்கப்பட்டவரின் மனைவிக்கு பதவி
Published on

சென்னை,

செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட த.வெ.க. இணை செயலாளராகவும், மாம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவராகவும் இருந்தவர் வீரா என்ற வீராசாமி. இவர் மீது எழுந்த லஞ்சப் புகாரால் அவரிடம் இருந்து கட்சி பொறுப்பு பறிக்கப்பட்டது. கட்சியில் இருந்தும் நீக்கப்பட்டார். இதற்கான நடவடிக்கை செங்கல்பட்டு மாவட்ட த.வெ.க. தலைமை எடுத்தது.

இந்த நிலையில்,, கடந்த சில நாட்களுக்கு முன்பு புதிய மாவட்ட செயலாளர்களையும், நிர்வாகிகளையும் த.வெ.க. தலைவரும், முதல்-அமைச்சருமான விஜய் அறிவித்தார். இதில், செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட இணை செயலாளர் பொறுப்பில் ஹேமாவதி நியமிக்கப்பட்டார். இவர் வீராசாமியின் மனைவி ஆவார்.

வீராசாமியிடம் இருந்து பறிக்கப்பட்ட அதே பதவி அவரது மனைவிக்கு தற்போது வழங்கப்பட்டு இருப்பது, செங்கல்பட்டு மாவட்ட த.வெ.க.வில் தற்போது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் கடும் விமர்சனங்களையும் ஏற்படுத்தியுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com