கூடலூர் அருகே பட்டப் பகலில் கிராமத்துக்குள் நுழைந்த காட்டு யானை - பொதுமக்கள் பீதி

வீடுகளுக்குள் இருந்தவாறு மக்கள் சத்தம் போட்டதால், காட்டு யானை அங்கிருந்து மெதுவாக சென்றது.
கூடலூர் அருகே பட்டப் பகலில் கிராமத்துக்குள் நுழைந்த காட்டு யானை - பொதுமக்கள் பீதி
Published on

நீலகிரி,

நீலகிரி மாவட்டம் கூடலூர் தாலுகா தேவாலா மற்றும் கைதக்கொல்லி, ரவுஸ்டன் முல்லை எஸ்டேட் பகுதிகளில் மொட்டைவால் என்று அழைக்கப்படும் காட்டு யானை கடந்த சில நாட்களாக சுற்றித்திரிகிறது. இதனால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். இந்த நிலையில் கைதக்கொல்லி கிராமத்துக்குள் பகல் நேரத்திலேயே காட்டு யானை அடிக்கடி நுழைந்து வருகிறது.

நேற்று பொதுமக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதியில் காட்டு யானை முகாமிட்டது. அப்போது வீட்டின் முன்பு மக்களால் கட்டப்பட்டு இருந்த தார்பாலின் ஷீட்டுகளுக்குள் குனிந்தவாறு நடந்து சென்று, சிறிது நேரம் நின்றது. இதை பார்த்த பொதுமக்கள் பீதி அடைந்தனர். தொடர்ந்து காட்டு யானை வீடுகள் முன்பு சிறிது நேரம் முகாமிட்டபடி நின்றது. பின்னர் வீடுகளுக்குள் இருந்தவாறு மக்கள் சத்தம் போட்டதால், காட்டு யானை அங்கிருந்து மெதுவாக நடந்து சென்றது.

பின்பு பிரதான சாலைக்கு வந்த யானை, பயணிகள் நிழற்குடையை கடந்து சென்றபோது திடீரென பிளிறியது. இதனால் வாகன ஓட்டிகளும் அச்சமடைந்தனர். தொடர்ந்து அந்த யானை தனியார் எஸ்டேட் வழியாக வனப்பகுதிக்குள் சென்றது. அதன் பின்னரே கிராம மக்கள் வீடுகளை விட்டு வெளியே வந்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com