பலாமரத்தில் தாவி பழங்களை பறித்த காட்டு யானை - ஓட்டம் பிடித்த தோட்ட தொழிலாளர்கள்

யானை பலா மரத்தில் தாவி ஏறி நின்று துதிக்கையால் பலாப்பழங்களை பறித்து தின்றது.
பலாமரத்தில் தாவி பழங்களை பறித்த காட்டு யானை - ஓட்டம் பிடித்த தோட்ட தொழிலாளர்கள்
Published on

கோவை,

கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள குரங்குமுடி எஸ்டேட் தேயிலை தோட்ட பகுதியை ஒட்டிய வனப்பகுதியில் காட்டு யானைகள் நேற்று முகாமிட்டு இருந்தன. தேயிலை தோட்டத்தில் இருந்த பலா மரத்தில் இருக்கும் பலாப்பழங்களை பறித்து தின்பதற்கு பட்டப்பகலில் ஒரு யானை அங்கு வந்தது.

மரத்தில் பலாப்பழங்கள் உயரத்தில் இருந்ததால் யானையால் அதை பறிக்க முடியவில்லை. இதனால் யானை பலா மரத்தில் தாவி ஏறி நின்று துதிக்கையால் பலாப்பழங்களை பறித்து தின்றது. காட்டு யானை தேயிலை தோட்டத்துக்குள் வந்ததும் அங்கிருந்த தொழிலாளர்கள் ஓட்டம் பிடித்தனர்.

அப்போது காட்டு யானை, பலாப்பழத்தை பறிக்கும் காட்சியை தங்கள் செல்போனில் எடுத்து மகிழ்ந்தனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com