

சென்னை,
சென்னையில் அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், நிருபர்களிடம் கூறியதாவது:-
அ.தி.மு.க. துணை பொதுச்செயலாளராக 2017-ம் ஆண்டு நியமிக்கப்பட்டு 2 மாதத்தில் கட்சியல் இருந்து என்னை நீக்கினார்கள். அப்போது 6 மாதம் பொறுத்திருந்து சிறைக்குச் சென்று காத்திருந்தேன். அ.தி.மு.க.கட்சி என்பதால் அவசரப்படக்கூடாது என்பதற்காக காத்திருந்தேன். சுய கவுரவம் பாதித்தால் யாருக்கும் கோபம் வரும். அதனால் அ.ம.மு.க. தொடங்கப்பட்டது. கடந்த 9 ஆண்டுகளாக அ.ம.மு.க. தமிழ்நாட்டில் செயல்பட்டு வருகிறது. 2021- ஆண்டு நடந்த தேர்தலில் கூட மத்திய மந்திரி அமித்ஷா என்னை அழைத்து ஒன்றாக வரவேண்டும் என கூறினார். அப்போது ஒரே கட்சியாக வரவில்லை. கூட்டணியில் வருகிறோம் என தெரிவித்தோம்.
நடப்பாண்டு மன வருத்தங்களை விட்டு ஜெயலலிதாவின் ஆட்சி வரவேண்டும் என சேர்ந்து முயற்சி செய்தோம். சமூக வலைதளங்கள் அ.தி.மு.க.விடம் அ.ம.மு.க. இணைய வேண்டும் என கருத்துகள் வருகிறது. நான் அவர்களுடன் தான் இருக்கிறேன். த.வெ.க.விற்கு ஆதரவு அளித்திருக்க முடியும். நான் மற்ற அரசியல்வாதிகள் போல் கிடையாது. மற்ற கட்சி போல் ஒரு கூட்டணியில் இருந்து வெற்றி பெற்று அதற்கு நேர் எதிரான கூட்டணிக்கு ஆதரவளித்து அமைச்சராவது நான் கிடையாது. தேர்தலுக்கு பிறகும் தேசிய ஜனநாயக கூட்டணியில் பா.ஜ.க. மற்றும் அ.தி.மு.க. வுக்கு ஆதரவாக இருக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.