தார்சாலை அமைத்து தரப்படுமா?

தார்சாலை அமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தார்சாலை அமைத்து தரப்படுமா?
Published on

காரியாபட்டி

காரியாபட்டி பேரூராட்சியை சேர்ந்த சிலோன் காலனி மற்றும் அதன் விரிவாக்கப்பட்ட பகுதிகளில் எண்ணற்ற குடியிருப்புகள் உள்ளன. இந்த பகுதியில் சாலை வசதி இல்லாததால் மழை காலங்களில் பொதுமக்கள் நடந்து செல்ல கூட முடியாத நிலை இருந்து வருகிறது. விரிவாக்கப்பட்ட பகுதி என்பதால் சாலைகளில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி துர்நாற்றம் வீசி வருகிறது. மழை காலங்களில் தேங்கும் தண்ணீரால் அதிக அளவில் கொசு உற்பத்தியாகிறது. இந்தப்பகுதியில் சாலை போடப்படாததால் வாகனங்களில் செல்வோர் சிரமத்துடன் செல்ல வேண்டி உள்ளது. தற்போது இந்த பகுதி நன்கு வளர்ந்து வருவதால் சாலை வசதி செய்து தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com