வடிகால் சுத்தம் செய்யப்படுமா?

வடிகால் சுத்தம் செய்யப்படுமா?
வடிகால் சுத்தம் செய்யப்படுமா?
Published on

தஞ்சை மாவட்டம் பூதலூர் பகுதி புதுப்பட்டி கிராமத்தில் வடிகால் வாய்க்காலில் குப்பைகள், கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதன் காரணமாக அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும், தேங்கி கிடக்கும் கழிவுநீரில் கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாகிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. மேலும், தேங்கி கிடக்கும் குப்பைகளால் வடிகால் விஷப்பூச்சிகளின் கூடாரமாக மாறிவருகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள வடிகாலை சுத்தம் செய்ய நடவடிக்கை எடுப்பார்களா?

-பொதுமக்கள், புதுப்பட்டி.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com