திருவண்ணாமலை கோவிலின் பெயர் மாற்றமா? - தமிழக அரசு விளக்கம்


திருவண்ணாமலை கோவிலின் பெயர் மாற்றமா? - தமிழக அரசு விளக்கம்
x

கோப்புப்படம் 

கோவில் பெயர் மாற்றப்படுவதாகப் பரப்பப்படும் தகவல் உண்மைக்குப் புறம்பானது என்று தமிழக அரசின் தகவல் சரிபார்ப்பகம் விளக்கம் அளித்துள்ளது.

சென்னை

திருவண்ணாமலை கோவிலின் பெயர் படிப்படியாக அருணாசலேசுவரர் கோவில் என்று மாற்றப்படுவதாக ஒருவர் பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இதனை பலரும் பகிர்ந்து வருகின்றனர். இதுதொடர்பாக தமிழக அரசின் அதிகாரப்பூர்வ சமூக ஊடக கணக்கான தகவல் சரிபார்ப்பகம் விளக்கம் அளித்துள்ளது. அந்தப் பதிவில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-

இது முற்றிலும் பொய்யான தகவல். திருவண்ணாமலை கோவில் இணை ஆணையர் அளித்துள்ள விளக்கத்தில், "1940-ம் ஆண்டு சைவ சித்தாந்த மகா சமாஜக் காரியதரிசி ம.பாலசுப்பிரமணியனால் எழுதப்பட்ட 'திருவண்ணாமலை வரலாறு' என்ற நூலில் இந்த கோவிலின் பெயர் ஸ்ரீ அருணாசலேசுவரர் தேவஸ்தானம் என்றுதான் குறிப்பிடப்பட்டுள்ளது.

பல நூற்றாண்டுகளாகவே பக்தர்கள் அண்ணாமலையார் கோவில், அருணாசலேசுவரர் கோவில் ஆகிய பெயர்களில் அழைத்து வருகின்றனர். கோவில் பெயர் மாற்றப்படுவதாகப் பரப்பப்படும் தகவல் உண்மைக்குப் புறம்பானது" என்று கூறியுள்ளார். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story