தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படுமா? - கமல்ஹாசன் பதில்

ஜனநாயக கடமையை செய்துவிட்டு வந்துள்ளதாக கமல்ஹாசன் கூறினார்.
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படுமா? - கமல்ஹாசன் பதில்
Published on

சென்னை,

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், தன்னுடைய மகள் சுருதிஹாசனுடன் சென்னை ஆழ்வார்ப்பேட்டை, எல்டாம்ஸ் சாலையில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் நேற்று ஒட்டுப் போட்டார். நீண்ட வரிசையில் மக்களோடு, மக்களாக நின்று வாக்கை செலுத்தினார்.

பின்னர் வெளியே வந்த கமல்ஹாசன் நிருபர்களிடம் கூறுகையில், 'என்னுடைய ஜனநாயக கடமையை செய்துவிட்டு வந்துள்ளேன்' என்றார். மேலும் அவரிடம், 'மாற்றம் வருமா?' என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு கமல்ஹாசன், 'மாற்றம் வந்து கொண்டே இருக்கும்' என்றார். மேலும் நிருபர் ஆட்சி மாற்றமா? என்று அவரிடம் கேட் டார். அதற்கு, 'ஆட்சி மாற்றம் இல்லை. உங்கள் வாழ்க்கை மாறும்' என்று பதில் அளித்து புறப்பட்டு சென்றார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com