நெடுஞ்சாலை துறை சார்ந்த அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை

நெடுஞ்சாலை துறை மானியக் கோரிக்கை தொடர்பாக துறை சார்ந்த அதிகாரிகளுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.
நெடுஞ்சாலை துறை சார்ந்த அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை
Published on

சென்னை,

சட்டப்பேரவை வரும் 28ஆம் தேதி கூடும் நிலையில், மானியக் கோரிக்கைகளை தாக்கல் செய்வதற்கான பணிகளில் அமைச்சர்கள் ஈடுபட்டுள்ளனர்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தன் வசம் உள்ள நெடுஞ்சாலை துறை தொடர்பாக, தலைமை செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் ஆலோசனை நடத்தினார்.

தமிழகம் முழுவதும் இருந்து நெடுஞ்சாலை துறையின் பொறியாளர்கள் மற்றும் உயரதிகாரிகள் இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றனர். நெடுஞ்சாலை துறை சார்பில் தமிழகத்தில் நடைபெற்று வரும் பணிகளின் நிலை, ஏற்கனவே அறிவிக்கப்பட்ட திட்டங்களின் நிலை, புதிய திட்டங்களை அறிவிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள 8 வழிச்சாலை திட்டம் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து வரும் 26ஆம் தேதி, பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை நடத்த உள்ளார்.

கொள்கை விளக்க குறிப்புகளை இறுதி செய்வது, புதிய அறிவிப்புகளை இறுதி செய்வது, ஏற்கனவே அறிவிக்கப்பட்ட திட்டங்களின் நிலை மற்றும் செயல்பாடுகள் குறித்து, துறை சார்ந்த அதிகாரிகளுடன் அமைச்சர்கள் ஆலோசனை நடத்தினர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com