சென்னை வந்த விமானத்தில் பெண் உயிரிழப்பு

மாரடைப்பால் பெண் பயணி இறந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
சென்னை வந்த விமானத்தில் பெண் உயிரிழப்பு
Published on

சென்னை,

கோலாலம்பூரிலிருந்து சென்னைக்கு வந்த விமானத்தில் 37 வயது பெண் பயணி ஒருவர் இன்று இறந்து கிடந்ததாகவும், மேலும் அவர் மாரடைப்பால் இறந்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

விமானம் சென்னையில் தரையிறங்கியவுடன் விமான பணியாளர்கள் அந்த பெண் தூங்கியதாக நினைத்து அவரை எழுப்பியுள்ளனர். ஆனால் அந்த பெண் பதிலளிக்காததை கண்டு சந்தேகமடைந்த பணியாளர்கள் உடனடியாக மருத்துவர்கள் குழுவுக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து அங்கு வந்து அந்த பெண்ணை பரிசோதித்த மருத்துவர்கள் குழு மாரடைப்பு காரணமாக அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். பின்னர் இந்த சம்பவம் பற்றி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றி அருகில் உள்ள மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். உயிரிழந்தவர் தமிழ்நாட்டின் கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்தவர் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் பற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com