மது விற்ற பெண் கைது

மது விற்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
மது விற்ற பெண் கைது
Published on

நொய்யல்

கரூர் மாவட்டம், புன்னம்சத்திரம் அருகே பெரியரெங்கம்பாளையம் பகுதியில் ஒரு வீட்டில் திருட்டுத்தனமாக மது பாட்டிலை வைத்து விற்பனை செய்து வருவதாக அப்பகுதியை சேர்ந்த சிலர் வேலாயுதம்பாளையம் போலீசாருக்கு ரகசிய தகவல் தெரிவித்தனர். தகவலின்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பெரியசாமி தலைமையிலான போலீசார் சம்பவ இடமது விற்ற பெண் கைதுத்திற்கு விரைந்து சென்று சோதனையிட்டனர். அப்போது அங்கு உள்ள ஒரு வீட்டில் மது பாட்டில்களை பதுக்கிவைத்து விற்பனை செய்து கொண்டிருப்பது தெரியவந்தது. அதனடிப்படையில் பெரியரெங்கம்பாளையம் பகுதியை சேர்ந்த வளர்மதி(வயது 50) என்பவரை கைது செய்தனர். மேலும் அவர் விற்பனைக்காக வைத்திருந்த 5 மது பாட்டில்களை பறிமுதல் செய்து வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com