குத்தனூரில் திருட்டுத்தனமாக மது விற்ற பெண் கைது

குத்தனூரில் திருட்டுத்தனமாக மது விற்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
குத்தனூரில் திருட்டுத்தனமாக மது விற்ற பெண் கைது
Published on

காஞ்சீபுரம் மாவட்டம் கூடுவாஞ்சேரி அருகே உள்ள குத்தனூர் எம்.ஜி.ஆர். தெரு பகுதியில் உள்ள ஒரு வீட்டின் பின்புறம் திருட்டுத்தனமாக மது விற்பதாக கூடுவாஞ்சேரி மதுவிலக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்று பார்த்தபோது அங்கு வீட்டின் பின்புறம் திருட்டுத்தனமாக மது விற்று கொண்டிருப்பது தெரியவந்தது. திருட்டுத்தனமாக மது விற்றுக்கொண்டிருந்த மகேஸ்வரி (வயது 31) என்பவரை போலீசார் கைது செய்து அவரிடமிருந்து 12 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து கூடுவாஞ்சேரி மதுவிலக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com