ராமநத்தம் அருகே விஷம் குடித்து பெண் தற்கொலை

ராமநத்தம் அருகே விஷம் குடித்து பெண் தற்கொலை செய்து கொண்டார்.
ராமநத்தம் அருகே விஷம் குடித்து பெண் தற்கொலை
Published on

ராமநத்தம், 

ராமநத்தம் அடுத்த வாகையூர் கிராமத்தை சேர்ந்த ராஜ்குமார். இவர் இடைச்செருவாயில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி சபிதா(வயது 29). இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். சம்பவத்தன்று ராஜ்குமார் வேலைக்கு சென்று விட்டார். அப்போது சபிதா, ராஜ்குமாரை செல்போனில் தொடர்பு கொண்டு தான், சென்னையில் உள்ள அக்காள் சுபிதா வீட்டிற்கு செல்வதாக கூறி உள்ளார். அதற்கு அவர் நீ தனியாக செல்ல வேண்டாம் நான் வந்து அழைத்து செல்கிறேன் என்று கூறியதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த சபிதா, வீட்டில் இருந்த விஷத்தை எடுத்து குடித்து விட்டார். இதில் மயங்கிய நிலையில் இருந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சபிதா பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ராமநத்தம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com