திருவள்ளூரில் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை - வானதி சீனிவாசன் கண்டனம்

பெண்கள் பாதுகாப்பில் குறைந்தபட்ச சட்டங்களைக் கூட சரிவர செயல்படுத்தாத விடியா திமுக அரசை பெண்களே இந்தத் தேர்தலோடு வீழ வைப்பார்கள் என்று வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.
திருவள்ளூரில் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை - வானதி சீனிவாசன் கண்டனம்
Published on

திருவள்ளூர்,

பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் தனது எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

திருவள்ளுர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி கவரப்பேட்டையில் நேற்று முன் தினம் கணவனால் கைவிடப்பட்டு பெட்டிக் கடை நடத்தி வரும் 42 வயது பெண்ணை அப்பகுதியைச் சேர்ந்த 3 பேர் சேர்ந்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாகக் புகார் அளித்துள்ள சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது.

நேற்றுதான் உள்துறை செயலாளரும், தமிழக பொறுப்பு டிஜிபி-யும் தமிழகம் மிகப் பாதுகாப்பாக இருக்கிறது, குற்றங்கள் குறைவு என்று வாய்கூசாமல் ஏதோ வெற்று அறிக்கையை வாசித்தார்கள். அந்த அறிக்கை எந்த அளவிற்கு உண்மை என்பது ஒவ்வொரு தமிழ் மக்களும் அறிவார்கள். மார்ச் மாதத்தில் மகளிர் தின விழா கொண்டாட்டங்கள் நிறைந்திருக்கும் வேளையில் நேரெதிராக தினந்தோறும் அரங்கேறும் பாலியல் வன்கொடுமை செய்திகளும், பெண்கள் மீதான அத்துமீறல் சம்பவங்களும் அதிகரித்து தமிழகத்தை நாசக் காடாக்கியது தான் தீய சக்தி திமுக அரசு பெண்களுக்கு கொடுத்த பாதுகாப்பு. பெண்கள் பாதுகாப்பில் குறைந்தபட்ச சட்டங்களைக் கூட சரிவர செயல்படுத்தாத விடியா திமுக அரசை பெண்களே இந்தத் தேர்தலோடு வீழ வைப்பார்கள்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com