பெண் தூக்குப்போட்டு தற்கொலை - போலீசார் விசாரணை

பெரியபாளையம் அருகே பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெண் தூக்குப்போட்டு தற்கொலை - போலீசார் விசாரணை
Published on

திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், வடமதுரை ஊராட்சி, ராமாபுரம் கண்டிகை கிராமம், பஜனை கோவில் தெருவில் வசித்து வந்தவர் தனலட்சுமி (வயது 43). இவரது கணவர் வெங்கடேஷன். கூலித்தொழிலாளி. இவர்களுக்கு 2 ஆண் பிள்ளைகள் உள்ளனர். கடந்த சில நாட்களாக தனலட்சுமிக்கு தீராத வயிற்று வலி இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், நேற்று காலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வயிற்று வலியால் மனமுடைந்த தனலட்சுமி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அவரது வீட்டின் அருகே தனலட்சுமியின் தந்தை சாரங்கன் வீடு உள்ளது. தற்செயலாக தனலட்சுமியின் வீட்டுக்கு தந்தை சாரங்கன் வந்தார். அப்போது மகள் தனலட்சுமி தூக்கில் தொங்கிய நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து சாரங்கன் நேற்று பெரியபாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து தனலட்சுமி உடலை மீட்டு திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு சென்றனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com