காதலிக்க வற்புறுத்தி இளம்பெண்ணுக்கு தொல்லை - இளைஞரை பிடித்து காவல்நிலையத்தில் ஒப்படைத்த சிங்கப்பெண் படை

இளம்பெண் வேலை செய்யும் கடைக்கு நேரில் சென்ற வினோத்குமார், தன்னை காதலிக்குமாறு வற்புறுத்தி தகராறு செய்துள்ளார்.
காதலிக்க வற்புறுத்தி இளம்பெண்ணுக்கு தொல்லை - இளைஞரை பிடித்து காவல்நிலையத்தில் ஒப்படைத்த சிங்கப்பெண் படை
Published on

சென்னை,

கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த 20 வயது இளம்பெண் ஒருவர், சென்னை தி.நகரில் உள்ள கடையில் வேலை செய்து வருகிறார். அந்த பெண் தனது ஊரைச் சேர்ந்த வினோத்குமார் என்பவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் நாளடைவில் வினோத்குமாரின் நடவடிக்கைகள் பிடிக்காததால், அவருடன் பேசுவதை இளம்பெண் தவிர்த்துள்ளார்.

ஆனால் வினோத்குமார் அந்த பெண்ணை தொடர்ந்து செல்போனில் தொடர்பு கொண்டு, தன்னை காதலிக்குமாறு வற்புறுத்தி தொல்லை கொடுத்து வந்துள்ளார். செல்போன் எண்ணை மாற்றிய பிறகும் அந்த பெண்ணுக்கு தொல்லை கொடுப்பதை நிறுத்தாத வினோத்குமார், அந்த பெண் வேலை செய்யும் கடைக்கு நேரில் வந்து தன்னை காதலிக்குமாறு வற்புறுத்தி தகராறு செய்துள்ளார்.

இது குறித்து தகவலறிந்து வந்த தி.நகர் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை காவலர்கள், வினோத்குமாரை பிடித்து மாம்பலம் காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். விசாரணைக்குப் பின், தமிழ்நாடு பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்த போலீசார், வினோத்குமாரை கைது செய்து, பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com