மின்னல் தாக்கி பெண் பலி

நரிக்குடி அருகே மின்னல் தாக்கி பெண் பலியானார்.
மின்னல் தாக்கி பெண் பலி
Published on

காரியாபட்டி, 

நரிக்குடி ஊராட்சி ஒன்றியம், வீரசோழன் வேளானூரணி குரூப், உலகத்தேவன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பூரணம்(வயது 55). இவர் பருத்தி காட்டில் செடிகளுக்கு களை எடுத்துக்கொண்டு இருந்தார். அப்போது திடீரென பெய்த மழையின் போது மின்னல் தாக்கியதில் பூரணம் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டார். தகவல் அறிந்த திருச்சுழி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பூரணம் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சுழி அரசு மருத்துவனைக்கு கொண்டு சென்றனர். இதுகுறித்து திருச்சுழி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com