கோர்ட்டில் விஷம் தின்ற பெண்

கோர்ட்டில் பெண் விஷம் தின்றார்.
கோர்ட்டில் விஷம் தின்ற பெண்
Published on

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள உத்திரக்குடி கிராமத்தை சேர்ந்தவர் ஸ்வேதா(வயது 22). இவருக்கும், வானதிராயன்பட்டிணம் கிராமத்தை சேர்ந்த பாபு(20) என்பவருக்கும் கடந்த ஆண்டு இவரது உறவினர்கள் பேசி, திருமணம் செய்து வைத்துள்ளனர். இந்நிலையில் கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதையடுத்து, விவாகரத்து கோரி அரியலூரில் உள்ள குடும்ப நல கோர்ட்டில் வழக்கு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று இந்த வழக்கு விசாரணைக்காக கோர்ட்டுக்கு வந்த ஸ்வேதா, தன்னைவிட இளையவரான பாபுவிற்கு தன்னை கட்டாய திருமணம் செய்து வைத்ததாக கூறி, கையில் மறைத்து வைத்திருந்த எலிபசையை(விஷம்) தின்றார். இதை பார்த்த பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் உடனடியாக அவரை மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் அரியலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து அரியலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com