அனைத்து துறைகளிலும் சாதனை படைக்கும் பெண்கள்

அனைத்து துறைகளிலும் பெண்கள் சாதனை படைத்து வருகின்றனர் என அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் கூறினார்.
அனைத்து துறைகளிலும் சாதனை படைக்கும் பெண்கள்
Published on

அருப்புக்கோட்டை,

அனைத்து துறைகளிலும் பெண்கள் சாதனை படைத்து வருகின்றனர் என அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் கூறினார்.

வளைகாப்பு விழா

அருப்புக்கோட்டையில் சமூக நலன், மகளிர் உரிமைத்துறை மற்றும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம் சார்பில் சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது.

ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ஹேமலதா வரவேற்றார். நகர்மன்ற தலைவர் சுந்தரலட்சுமி, குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் பத்மாவதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் கலந்து கொண்டு 100 கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு சீதனப் பொருட்களை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

உங்கள் வீட்டில் பெற்றோர்கள் செய்ய வேண்டிய வளைகாப்பு நிகழ்ச்சியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பெற்றோராக இருந்து செய்து வருகிறார். உங்களை எல்லாம் வீட்டில் ஒருவராக நினைப்பதால் தான் அவர் ஆணையிட்டதின் பேரில் நாங்கள் இந்த வளைகாப்பு விழாவை நடத்தி வருகிறோம்.

காலை உணவுத்திட்டம்

வறுமையின் காரணமாக பல குடும்பங்களில் வளைகாப்பு நிகழ்ச்சி நடத்த முடியாத சூழ்நிலை உள்ளது. அதனை கருத்தில் கொண்டு இந்த வளைகாப்பு நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். பிறக்கக்கூடிய குழந்தைகள் ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொள்ள வேண்டும்.

ஆண்களை விட பெண்கள் தான் அனைத்து துறைகளிலும் சாதனை படைத்து வருகின்றனர். தற்போதைய சூழ்நிலையில் பெற்றோர்களை கவனிப்பதும் பெண் குழந்தைகள் தான். குழந்தைகளின் நலனை கருத்தில் காண்டு காலை உணவுத்திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் சுப்பாராஜ், முன்னாள் நகர் மன்ற தலைவர் சிவப்பிரகாசம், நகர்மன்ற துணைத்தலைவர் பழனிச்சாமி, தி.மு.க. நகர செயலாளர் மணி, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் பாபுஜி, நகர்மன்ற உறுப்பினர்கள் இளங்கோ, ஜோதி ராமலிங்கம், டுவிங்கிளின் ஞானபிரபா, தாசில்தார் அறிவழகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com