தமிழகத்தில் பெண்களுக்கு எங்கும் பாதுகாப்பில்லை: தவெக அரசுகு கனிமொழி கண்டனம்

.பெண்களுக்கு எங்கும் பாதுகாப்பில்லை எனும் மோசமான சூழலுக்குள் தமிழ்நாட்டைத் தள்ளியிருக்கிறது தரங்கெட்ட தவெக அரசு என்று விமர்சித்துள்ளார்.
தமிழகத்தில் பெண்களுக்கு எங்கும் பாதுகாப்பில்லை: தவெக அரசுகு கனிமொழி கண்டனம்
Published on: 

தூத்துக்குடி எம்பி கனிமொழி தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: தூத்துக்குடி மாவட்டம், வேதமாணிக்கபுரத்தில் 11-ஆம் வகுப்பு மாணவி வீடு புகுந்து குத்திக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.பெண்களுக்கு எங்கும் பாதுகாப்பில்லை எனும் மோசமான சூழலுக்குள் தமிழ்நாட்டைத் தள்ளியிருக்கிறது தரங்கெட்ட தவெக அரசு.

வீடு புகுந்து பெண்கள் தாக்கப்படுவதும் கொல்லப்படுவதும் அன்றாடச் செய்தியாகிக்கொண்டிருக்கிறது. சிங்கப் பெண் அதிரடிப்படை எங்கே போய்த் தூங்கிக்கொண்டிருக்கிறது? பெண்களின் பாதுகாப்பு குறித்து வாய்கிழிய வசனம் பேசிய முதலமைச்சர் விஜய் இந்தச் சம்பவங்கள் கொஞ்சம் கூட உங்களை உறுத்தவில்லையா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

தூத்துக்குடி பள்ளி மாணவி கொலை

தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரம் அருகே உள்ள சோலைப்புதூர் கிராமத்தைச் சேர்ந்த சுடலைமணி என்பவரின் 17 வயது மகள், செபத்தையாபுரத்தில் உள்ள பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். இவரது பக்கத்து வீட்டில் வசித்து வரும் உறவினரான காசிபாண்டியன் என்பவரின் மகன் முத்துராஜ் (23) என்பவரும், அந்த மாணவியும் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், அந்த மாணவி அடிக்கடி செல்போனில் பேசிக் கொண்டிருந்ததாகத் தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த முத்துராஜ், மாணவியிடம் இது குறித்துக் கேட்டுத் தகராறில் ஈடுபட்டுள்ளார். இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த முத்துராஜ் மறைத்து வைத்திருந்த கத்தியால் மாணவியைக் குத்தியதுடன், துப்பட்டாவால் கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார்.

X