அவ்வையார் விருது பெற பெண்கள் விண்ணப்பிக்கலாம்..!

இந்த விருதுக்காக ரூ.1½ லட்சத்திற்கான காசோலை, பொன்னாடை மற்றும் சான்றிதழ் வழங்கப்படுகிறது.
அவ்வையார் விருது பெற பெண்கள் விண்ணப்பிக்கலாம்..!
Published on: 

தஞ்சாவூர்,

அவ்வையாளர் விருது பெற பெண்கள் விண்ணப்பிக்கலாம் என தஞ்சை மாவட்ட கலெக்டர் ரேவதி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர், வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

மகளிர் தினவிழா

சர்வதேச மகளிர் தினவிழா ஆண்டுதோறும் மார்ச் 8-ந் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. மகளிர் தின விழா கொண்டாட்டத்தின்போது, பெண்களின் முன்னேற்றத்திற்கு சிறந்த சேவை புரிந்த ஒருவருக்கு அவ்வையார் விருது தமிழக முதல்-அமைச்சரால் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த விருதுக்காக ரூ.1½ லட்சத்திற்கான காசோலை, பொன்னாடை மற்றும் சான்றிதழ் வழங்கப்படுகிறது. இந்த விருதுக்கு விண்ணப்பம் செய்ய தமிழக அரசின் விருது கள் இணையதளத்தில் (https://awards.tn.gov.in) ஜனவரி மாதம் 18-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

5 ஆண்டுகள்

இந்த விருதுக்கு விண்ணப்பிக்க தமிழ்நாட்டை பிறப்பிடமாக கொண்டவரும் 18 வய திற்கு மேற்பட்டவராகவும் இருத்தல் வேண்டும். குறைந்த பட்சம் 5 ஆண்டுகள் பெண் குலத்திற்கு பெருமை சேர்க்கும் வகையிலான நடவடிக்கைகள், சமூகநல சீர்தி ருத்தம், மகளிர் மேம்பாடு, மதநல்லிணக்கம், மொழித்தொண்டு, கலை, அறிவியல், பண்பாடு, கலாசாரம், பத்திரிகை, நிர்வாகம் உள்பட பல்வேறு துறைகளில் மிக சிறந்து விளங்கும் பெண்கள் இருத்தல் வேண்டும்.

பெண்களுக்கான இந்த சமூக சேவையை தவிர்த்து வேறு சமூக சேவைகள் இவ்விரு துக்கு ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. இணையதளத்தில் பதிவு செய்த பிறகு அனைத்து ஆவணங்களையும் சம்பந்தப்பட்ட மாவட்ட சமூக நல அலுவலகத்திற்கு, கையேடாக தயார் செய்து தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் அச்சு செய்யப்பட்டு தலா 2 நகல்கள் அனுப்ப வேண்டும். இதற்கான படிவங்கள் மற்றும் விவரங்களுக்கு அறை எண்-303, 3-வது தளம், மாவட்ட சமூக நல அலுவலகம், மாவட்ட கலெக்டர் அலுவ லக வளாகம், தஞ்சை என்ற முகவரியில் பெற்று கொள்ளலாம்.

மேற்கண்டவாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X