குழந்தை வரம் வேண்டி மண்சோறு சாப்பிட்ட பெண்கள்

சேத்துப்பட்டு அருகே குழந்தை வரம் வேண்டி பெண்கள் மண்சோறு சாப்பிட்டனர்.
குழந்தை வரம் வேண்டி மண்சோறு சாப்பிட்ட பெண்கள்
Published on

சேத்துப்பட்டு

சேத்துப்பட்டு அருகே குழந்தை வரம் வேண்டி பெண்கள் மண்சோறு சாப்பிட்டனர்.

சேத்துப்பட்டு தாலுகா கோட்டுப்பாக்கம் கிராமத்தில் பரதேசி ஆறுமுகசாமி குருபூஜை விழா ஒவ்வொரு ஆண்டும் ஆடி அமாவாசையன்று நடைபெறும். குழந்தை இல்லாத பெண்கள் இதில் பங்கேற்று வழிபட்டு கோவிலில் வழங்கும் பிரசாதத்தை முழங்காலிட்டு கைகளை பின்புறமாக கட்டியவாறு மண்சோறு சாப்பிடுவர்.

இந்த ஆண்டு குருபூஜையை முன்னிட்டு பரதேசி ஆறுமுகசாமி சமாதிக்கு பால், தயிர், பன்னீர், சந்தனம், குங்குமம், இளநீர் ஆகியவை அபிஷேகம் செய்யப்பட்டது.

குழந்தை வரம் கேட்டு வழிபட வந்த 1,200 பெண்கள் கோவில் முன்பு அமர வைக்கப்பட்டனர். அதில் பெரிய மேடை அமைத்து பல்வேறு யாகங்கள் நடந்தது.

பின்னர் குழந்தை வரம் கேட்டு வழிபட்ட பெண்களுக்கு பிரசாதம் தயார் செய்து குருபூஜை செய்து பல்வேறு பகுதியில் உள்ள சாதுக்கள் மூலம் வழங்கப்பட்டது.

அதனை முந்தானையில் வாங்கிய பெண்கள் கோவில் முன்பு உள்ள குளத்தில் படிக்கட்டில் முழங்காலிட்டு கைகளை பின்புறமாக கட்டிக்கொண்டு குனிந்து சாப்பிட்டனர். வள்ளி, தெய்வானை முருகனுக்கு அலங்காரம் செய்து வைத்து கற்பூர ஆராதனை காண்பிக்கப்பட்டது.

பக்தர்கள் புஷ்பக் காவடி, பால் காவடி, பன்னீர் காவடி யுடன் வலம் வந்து பரதேசி ஆறுமுகசாமி சமாதியில் வைத்து சாத்துபடி செய்தனர். ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

குழந்தை பெற்ற தாய்மார்கள் எடைக்கு எடை காசுகளை வைத்து துலாபாரத்தில் காணிக்கை, செலுத்தினார்கள். இரவு சாமி வீதி உலா வந்தது. ஏற்பாடுகளை கோட்டு பாக்கம் பரதேசி மகான்ஆறுமுகசாமிவிழா குழுவினர்கள் செய்திருந்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com