மகளிர் தினம்; சுற்றுலா பயணிகளுக்கு மாமல்லபுரத்தில் இன்று இலவசம்

மாமல்லபுரத்தில் இன்று சுற்றுலா பயணிகள் புராதன சின்னங்களை இலவசமாக கண்டு களிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மகளிர் தினம்; சுற்றுலா பயணிகளுக்கு மாமல்லபுரத்தில் இன்று இலவசம்
Published on

செங்கல்பட்டு,

பெண்களின் மகத்தான சாதனைகளை போற்றும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச அளவில் மார்ச் 8 ஆம் தேதி பெண்கள் தினமாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் இன்று பெண்கள் தினத்தை முன்னிட்டு அரசு சார்பிலும், தனியார் அமைப்புகள் சார்பிலும் பல இடங்களில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.

இந்த நிலையில், தமிழகத்தின் மிக முக்கியமான மற்றும் வரலாற்று சிறப்பு வாய்ந்த சுற்றுலா தளமான மாமல்லபுரத்தில், இன்று பெண்கள் தினத்தை முன்னிட்டு சுற்றுலா பயணிகள் புராதன சின்னங்களை கட்டணம் இன்றி இலவசமாக கண்டு களிக்கலாம் என்று தொல்லியல் துறை அறிவித்துள்ளது.

அதன்படி வெண்ணை உருண்டை பாறை, அர்ச்சுனன் தபசு, ஐந்து ரதம் கடற்கரை கோவில் உள்ளிட்ட புராதன சின்னங்களை இன்று காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை நுழைவு கட்டணமின்றி சுற்றுலா பயணிகள் இலவசமாக கண்டு ரசிக்கலாம். மாமல்லபுரத்தில் வழக்கமாக உள்நாட்டு பயணிகளுக்கு 40 ரூபாயும், வெளிநாட்டு பயணிகளுக்கு 600 ரூபாயும் கட்டணமாக வசூலிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com