மது குடிப்பதை மனைவி கண்டித்ததால் தொழிலாளி தற்கொலை

மது குடிப்பதை மனைவி கண்டித்ததால் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மது குடிப்பதை மனைவி கண்டித்ததால் தொழிலாளி தற்கொலை
Published on

மனைவி கண்டித்தார்

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் நகராட்சிக்குட்பட்ட செங்குன்றம் பகுதியை சேர்ந்தவர் சதீஷ் (வயது 39), இவர் பூக்கடையில் வேலை செய்து வந்தார். இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததால் தினமும் மது குடித்து விட்டு வீட்டுக்கு செல்வதை வழக்கமாக கொண்டிருந்தார். சதீஷ் மது குடிப்பதை அவரது மனைவி கண்டித்தார்.இதனால் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.

தற்கொலை

இதனால் மனமுடைந்த சதீஷ் நேற்று முன்தினம் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த மறைமலைநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று தூக்கில் தொங்கிய நிலையில் இருந்த சதீஷின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து மறைமலைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com