தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை

தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை சய்து காண்டார்.
தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை
Published on

நாகர்கோவில்:

நாகர்கோவில் மேலப்பெருவிளை பகுதியை சேர்ந்தவர் தர்மா (வயது 60), தொழிலாளி. இவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு உடல் நிலை பாதிக்கப்பட்டது. இதனால் மனவேதனையில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சம்பவத்தன்று தர்மா வீட்டில் விஷத்தை குடித்து மயங்கி கிடந்தார். உடனே உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று தர்மா பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து ஆசாரிபள்ளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

--

--

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com