புதுக்கடை அருகே திருமணம் ஆகாத ஏக்கத்தில் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை

புதுக்கடை அருகே திருமணம் ஆகாத ஏக்கத்தில் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
புதுக்கடை அருகே திருமணம் ஆகாத ஏக்கத்தில் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை
Published on

புதுக்கடை:

புதுக்கடை அருகே உள்ள மாராயபுரம் பகுதியைச் சேர்ந்தவர் தாமோதரன். இவருடைய மகன் சுதாகர் (வயது32), கூலி தொழிலாளி. இவருக்கு திருமணம் செய்து வைக்க உறவினர்கள் பல இடங்களில் பெண் பார்த்தனர். ஆனால் எந்த வரனும் சரியாக அமையவில்லை. இதனால் மனமுடந்த சுதாகர் கடந்த சில நாட்களாக சரியாக வேலைக்கு செல்லாமல் சோகத்துடன் காணப்பட்டார். இந்தநிலையில் வாழ்க்கையில் வெறுப்புற்ற அவர் சம்பவத்தன்று காலையில் வீட்டில் விஷம் குடித்த நிலையில் மயங்கி கிடந்தார். அவரை உறவினர்கள் மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் சுதாகர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் புதுக்கடை இன்ஸ்பெக்டர் ஜேசுராஜசேகரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

---

X

Daily Thanthi
www.dailythanthi.com