தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை

தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
Published on

நாகர்கோவில்:

நாகர்கோவில் வடிவீஸ்வரம் பகுதியை சேர்ந்தவர் முருகன் (வயது 56), தொழிலாளி. இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இதனால் அவர் தனது தாயாருடன் வாழ்ந்து வந்தார். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு தாயார் இறந்துவிட்டார். இதனால் முருகன் மனவேதனையில் இருந்து வந்தார்.

இந்தநிலையில் சம்பவத்தன்று வீட்டில் இருந்த முருகன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி தகவல் அறிந்த கோட்டார் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் தற்கொலை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com