குடும்ப தகராறில் தொழிலாளி தற்கொலை

குடும்ப தகராறில் தொழிலாளி தற்கொலை
குடும்ப தகராறில் தொழிலாளி தற்கொலை
Published on

அந்தியூர்

அந்தியூர் தவுட்டுப்பாளையம் ஏ.கே.பழனியப்பா வீதி பகுதியை சேர்ந்தவர் பிரபு (வயது 41). விசைத்தறி தொழிலாளி. அவருடைய மனைவி ராணி (38). இந்த நிலையில் தகராறு காரணமாக இவர் கணவரை விட்டு பிரிந்து சென்று தனியாக வசித்து வந்தார். இதனால் மனமுடைந்து காணப்பட்ட பிரபு வீட்டில் தூக்குப்போட்டு கொண்டார். இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக அந்தியூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்துவிட்டு பிரபு ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com