காசிமேட்டில் முன்விரோதம் காரணமாக தொழிலாளிக்கு வெட்டு - 5 பேர் கைது

காசிமேட்டில் முன்விரோதம் காரணமாக தொழிலாளியை கத்தியால் வெட்டிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
காசிமேட்டில் முன்விரோதம் காரணமாக தொழிலாளிக்கு வெட்டு - 5 பேர் கைது
Published on

காசிமேடு இந்திரா நகரை சேர்ந்தவர் ஆரோக்கியராஜ் (வயது 44). இவர் நேற்று முன்தினம் தனது வீட்டின் அருகே நடந்து சென்றார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த 6 மர்ம நபர்கள் ஆரோக்கியராஜை வழிமறித்து, தகராறு செய்து மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ஆரோக்கியராஜை வெட்டி விட்டு தப்பி ஓடி விட்டனர். பலத்த காயமடைந்த ஆரோக்கியராஜை அருகில் இருந்தவர்கள் மீட்டு ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் கொண்டு சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து காசிமேடு போலீசார் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். விசாரணையில் அதேபகுதியை சேர்ந்த பிரதீப் (19), பிரவீன் (22), யுவேந்திரன் என்கிற மண்டை (19), அஜய் (19), சிங்காரவேலன் நகரைச் சேர்ந்த சைலேஷ் (20) ஆகியோர் முன்விரோதம் காரணமாக ஆரோக்கியராஜை வழிமறித்து தாக்கியது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து 2 கத்தி, 1 மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்தனர். போலீசார் 5 பேரையும் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவாக உள்ள மற்றொரு பிரதிப்பை போலீசார் தேடி வருகிறார்கள்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com