மினி லாரி மோதி தொழிலாளி பலி

சேரன்மாதேவி அருகே மினி லாரி மோதி தொழிலாளி பலியானார்.
மினி லாரி மோதி தொழிலாளி பலி
Published on

சேரன்மாதேவி:

சேரன்மாதேவி அருகே உள்ள புலவன்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் தர்மராஜ் (வயது 61), தொழிலாளி. இவருக்கு திருமணமாகி ரீட்டா என்ற மனைவியும், வேதமணி, பிரிசில்லா, பிளஸ்சி ஆகிய மூன்று மகள்களும் உள்ளனர். இந்நிலையில் நேற்று காலை புலவன் குடியிருப்பு மெயின் ரோட்டில் தர்மராஜ் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த மினி லாரி திடீரென தர்மராஜ் மீது மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

தகவல் அறிந்ததும் சேரன்மாதேவி போலீசார் விரைந்து வந்தனர். அவரது உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com