விஷம் குடித்து தொழிலாளி சாவு

குடவாசல் அருகே விஷம் குடித்து தொழிலாளி உயிரிழந்தார்.
விஷம் குடித்து தொழிலாளி சாவு
Published on

குடவாசல்:

குடவாசல் அருகே உள்ள எட்டியலூர் வடக்கு தெருவை சேர்ந்தவர் ரவி (வயது50) கூலித்தொழிலாளி. இவர் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் மனமுடைந்த ரவி சம்பவத்தன்று வயலுக்கு தெளிக்க வைத்திருந்த பூச்சி மருந்தை எடுத்து குடித்து விட்டு மயங்கி விழுந்தார். உடனே அக்கம், பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காகதிருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ரவி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் குடவாசல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com