தென்னை மரத்தில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி உயிரிழப்பு

திருச்செந்தூர் அருகே தளவாய்புரத்தைச் சேர்ந்த தென்னை மரம் ஏறும் தொழிலாளி, பக்கத்து வீட்டில் உள்ள தென்னை மரத்தில் ஏறி தேங்காய் பறித்துக் கொண்டிருந்தபோது, தவறி கீழே விழுந்து படுகாயமடைந்தார்.
தென்னை மரத்தில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி உயிரிழப்பு
Published on

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகே தளவாய்புரத்தைச் சேர்ந்தவர் ஞானராஜ் (வயது 55), தென்னை மரம் ஏறும் தொழிலாளி. இவருக்கு மனைவி, 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். இவர் நேற்று முன்தினம் பக்கத்து வீட்டில் உள்ள தென்னை மரத்தில் ஏறி தேங்காய் பறித்துக் கொண்டிருந்தபோது, தவறி கீழே விழுந்து படுகாயமடைந்தார்.

இதனையடுத்து அவர், சிகிச்சைக்காக திருச்செந்தூரில் ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதனையடுத்து அவரது உடல் கூராய்வுக்காக திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து திருச்செந்தூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com