தூத்துக்குடியில் மின்சாரம் தாக்கி தொழிலாளி உயிரிழப்பு

தூத்துக்குடியில் கூலித் தொழிலாளி ஒருவர், தனது வீட்டில் மின் பழுது பார்த்துக் கொண்டிருந்த போது திடீரென மின்சாரம் தாக்கியதில் பலத்த காயமடைந்தார்.
தூத்துக்குடியில் மின்சாரம் தாக்கி தொழிலாளி உயிரிழப்பு
Published on

தூத்துக்குடி அழகேசபுரம் 2வது தெருவில் வசித்துவரும் காளிமுத்து மகன் கனகலிங்கம் (வயது 47), கூலித் தொழிலாளி. இவர் கடந்த 10-ம் தேதி தனது வீட்டில் மின் பழுது பார்த்துக் கொண்டிருந்த பேது திடீரென மின்சாரம் தாக்கியதில் பலத்த காயமடைந்தார்.

உடனடியாக அவரை தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் நேற்று இரவு பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து வடபாகம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பாலமுருகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.  

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com